2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..
2027 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி, புவனேஷ்வர் குமார் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற வேண்டுமா என்ற கேள்விக்கு, முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா ஆம் என்றே பதிலளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கான தனது கனவு அணியை உத்தப்பா அறிவித்துள்ளார். இந்த அணியை "போம் ஸ்குவாட்" என்று வர்ணித்துள்ள அவர், தற்போதைய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள சில முக்கிய வீரர்களை தவிர்த்துவிட்டு, சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பளித்துள்ளார்.
தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரை உத்தப்பா தனது அணியில் தக்கவைத்துள்ளார். மேலும், எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் ரோகித் சர்மாவுக்கும் தனது அணியில் இடமளித்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை மாற்று தொடக்க வீரராக அவர் தேர்வு செய்துள்ளார்.
ரோபின் உத்தப்பாவின் 2027 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி:
ஷுப்மன் கில், ரோகித் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், அர்ஷதீப் சிங்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


