அமெரிக்காவின் கடன் நெருக்கடியை திசை திருப்பவே எங்கள் மீது பொருளாதார D-Day - ஈரானின் ரியாக்‌ஷன்

ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்க நேற்று (ஆகஸ்ட் 19), ஈரானுக்கு எதிராகப் பொருளாதார D-Day-வை அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இது ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை ஆகும். “ஈரானுக்கு எந்த வகையிலாவது வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிதியமைப்புகள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகளை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் ‘மிகப் பெரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்பதையும் இன்று நான் அறிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப்

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கக் கூடும் என்றால், எந்த நாடும் ஈரானுக்கு உதவ வராது. இதுதான் ட்ரம்பின் பிளான்.

ஈரானின் இந்த முன்னெடுப்பை ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ‘அமெரிக்காவின் கடன் அளவு 40 டிரில்லியன் டாலரைத் தொட்டுள்ள செய்தியைப் பகிர்ந்து’, அவர் பதிவிட்டிருப்பதாவது...

“பொருளாதார டி-டே என்று சொல்லப்படுவது, கட்டுக்கடங்காத கடன் மற்றும் தாறுமாறாக உயர்ந்து வரும் வட்டிச் செலவுகள் போன்ற அமெரிக்காவின் சொந்த நெருக்கடிகளிலிருந்து கவனத்தைத் திருப்புவதற்கான ஒரு திசைதிருப்பல் நாடகமே ஆகும்.

தோல்வியடைந்த கொள்கைகளையே மீண்டும் மீண்டும் திணிப்பது மேலும் தோல்வியையும், ஈரானியர்களின் பகையையும்தான் கொண்டுவரும். அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம் உலகப் பொருளாதாரம் மற்றும் நாடுகளின் இறையாண்மைக்கே அச்சுறுத்தலாக உள்ளது.”

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.