தனுஷ் – கரீனா கபூர் இணையும் படம்!: பி.எஸ்.மித்ரன் சொன்ன ஹாட் அப்டேட் இதோ!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் (Dhanush) மற்றும் பாலிவுட் ஸ்டார் கரீனா கபூர் (Kareena Kapoor) ஆகிய இருவரும் இணைந்து நடிக்க, புகழ்பெற்ற இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி (Sanjay Leela Bhansali) தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (P.S. Mithran) இயக்கவுள்ளதாகச் செய்திகள் தீயாகப் பரவி வந்தன. இந்த மெகா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களைப் படக்குழுவினர் எதிர்பார்த்திருந்த நிலையில், இது குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் முதன்முறையாகத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பி.எஸ்.மித்ரன், இந்தத் திரைப்படம் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்பொழுது நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், அனைத்தும் முடிவாகி உறுதியான பிறகு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதே சிறந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலைக் கேட்டுத் தனுஷ் மற்றும் கரீனா கபூர் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சஞ்சய் லீலா பன்சாலி நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


