Rio Raj: அப்போது ராம் இன் லீலா, இப்போது ராம் & லீலா; சென்சாரினால் பட தலைப்பில் ஏற்பட்ட மாற்றம்!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரியோ நடித்திருக்கும் ராம் & லீலா படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சேத்தன், தீபா வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Rio - Ram & Leela

நடிகை தீபா வெங்கட், பல வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

இப்படம் வெளியாகவிருக்கிற நேரத்தில் படத்தின் தலைப்பில் சிறிய மாற்றத்தைப் படக்குழுவினர் மேற்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் இந்தத் திரைப்படத்திற்கு ராம் இன் லீலா எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், சென்சாரில் இந்தப் பெயரை மாற்றப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

அதன் பிறகு படத்தின் தலைப்பை ரகு இன் லீலா எனப் படக்குழுவினர் மாற்றவிருப்பதாகத் தகவல்கள் பேசப்பட்டன.

Rio - Ram & Leela
Rio - Ram & Leela

நேற்றைய தினம் படக்குழுவினர், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகப் பதிவிட்டார்கள். அதில் தலைப்பு, ராம் அண்ட் லீலா என மாற்றப்பட்டிருக்கிறது.

ராம் என்கிற பெயர் சென்சிடிவாக இருப்பதனால், தலைப்பில் மாற்றத்தை மேற்கொள்ள தணிக்கை குழுவினர் கூறியதாக நடிகர் ரியோ தெரிவித்திருக்கிறார்.

படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருப்பதாக நடிகர் ரியோ பதிவிட்ட பதிவில், "மின்னல விழுங்கி… U/A-வ கொப்பளிச்சாச்சு!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.