‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு!: அக்டோபர் 2-ல் பிரம்மாண்ட விழா – ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ (Jailer 2) திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளன.

வரவிருக்கும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ஆம் தேதி, இப்படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வை அக்டோபர் 9-ஆம் தேதி சன் டிவியில் (Sun TV) ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ரஜினிகாந்தின் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் (Nehru Indoor Stadium) நடைபெறுவது வழக்கம். எனினும், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த விழா எங்கு நடைபெறப்போகிறது என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விழாவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இடம் குறித்த விவரங்களைச் சன் பிக்சர்ஸ் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.