விக்ரமின் ‘சியான் 63’ மாஸ் கதைக்களம்: செஃப் ஆக களமிறங்கும் சீயான் – அதிர வைக்கும் படத்தின் சுவாரஸ்யமான தகவல்கள்!

தமிழ் திரையுலகின் ஸ்டைலிஷ் நடிகரான சீயான் விக்ரம் (Chiyaan Vikram) நடிப்பில், இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சியான் 63’ (Chiyaan 63). ‘இருமுகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் விக்ரம் சென்னையில் துடிப்பான வாழ்க்கை வாழும் ஒரு சமையல்காரராக (Chef) நடிக்கிறார். ரியாஷிபு (Riya Shibu) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், பிரபல ஸ்ரீலங்காவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர் ஒருவரின் மகள் கடத்தப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட, அந்தப் பிரச்சினையில் விக்ரம் சிக்குகிறார். அதிலிருந்து அவர் அந்தப் பெண்ணை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் முக்கியக் கதைக்களமாகும்.

விக்ரமுக்கு என்று பிரத்யேகமான மாஸ் திருப்புமுனைகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளுக்கிடையேயான நட்புறவைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நிஜ வாழ்க்கை நபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகத் தொடர்புபடுத்தப்படாமல், முழுக்க முழுக்க புனைக்கதையாக (Fiction) இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சென்னை பிரசாத் ஸ்டுடியோ மற்றும் கோயம்பேடு சந்தைப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஷூட்டிங்கில், ஒரு மாஸான அறிமுகப் பாடலும் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.