தனுஷ் மருமகன் பவிஷின் ‘அட்டாக்கர்’: பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது மிரட்டலான ஸ்பெஷல் போஸ்டர்!

தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் இளம் நடிகரும், நடிகர் தனுஷின் மருமகனுமான பவிஷ் (Pavish) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனைச் சிறப்பிக்கும் வகையில் அவர் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘அட்டாக்கர்’ (Attacker) திரைப்படத்தின் புதிய மற்றும் மிரட்டலான சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தாமோ நாகபூஷ்ணம் இயக்கத்தில் உருவாகும் இப்படம், முழுக்க முழுக்க வாலிபால் (Volleyball) விளையாட்டைப் பின்னணியமாகக் கொண்ட ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. இப்படத்தில் பவிஷுக்கு ஜோடியாக பிரபல நடிகர் சுந்தர்.சி மற்றும் குஷ்பு தம்பதியின் மகள் அவந்திகா சுந்தர் (Avantika Sundar) கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Zinema Media and Entertainment LTD (@zinemaindia)

கிராமப்புறத்து பின்னணியில் விளையாட்டு ஆர்வத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.