குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம்பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! - Serial updates

ஜாக்கெட்.. ஜாக்பாட்! - குஷ்பு கம்பேக்

ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு தொடர்பான இந்த நிகழ்ச்சியைப் பார்த்தோம் என்று சொன்ன பெண்களெல்லாம் அப்போது பார்த்திருப்பீர்கள்.

இந்தியில் கோன் பனேகா க்ரோர்பதி தமிழில் கோடீஸ்வரன் ஆகிய நிகழ்ச்சிகளின் வரிசையில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி மீண்டும் புது வடிவம் பெற்று அதே ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

குஷ்பு

கடந்த சில தினங்களாக குழப்பத்தில் குஷ்பு என்ற விளம்பரம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வந்ததே, அது இந்த நிகழ்ச்சியினுடையதுதானாம்.

பாஜகவில் அளிக்கப்பட்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தீவிர அரசியலிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாத குஷ்புவை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சின்னத்திரைக்கு அழைத்து வந்திருக்கிறது ஜெயா டிவி.

Zee

ஜீ 100

ஜீ சேனல் குழுமத்துக்கு இது 100வது ஆண்டு. அதைக் கொண்டாடும் விதமாக நாட்டின் முக்கிய நகரங்களில் விழா எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் சார்பாகவும் நேற்று அதற்கான விழா நடந்தது. சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், பிரசாந்த, ஆர்யா, விஜய் ஆண்டனி, கலையரசன், நடிகை ராதிகா என பெரிய திரையிலிருந்தும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நடிகர் நடிகைக‌கள், ஆரம்ப காலத்திலிருந்து சேனலுடன் பயணித்தவர்கள் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே கலந்து கொண்டனர்.

சாய் சக்தி

அதிக வட்டி ஆசை, அபேஸ் ஆன காசு!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சாய் சக்தி ஒரு புகாரைத் தந்துள்ளார். அதிக வட்டி தருவதாகச் சொல்லி சில லட்சங்களைத் தன்னிடமிருந்து ஏமாற்றி விட்டது ஒரு நிறுவனம் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

சாய் சக்தியிடம் பேசிய போது, ``அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை அவங்ககிட்ட முதலீடு செய்தது என் தப்புதான். ஆரம்பத்துல அஞ்சாறு மாசம் சொன்ன மாதிரியே வட்டி தந்தாங்க. பிறகு வட்டியும் வரலை. ஆளும் எஸ்கேப். வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டதாச் சொல்றாங்க. என்னை மாதிரியே பணத்தை இழந்தவங்க நிறையப் பேர் இருக்காங்க. சிலர் புகார் தர்றதுக்குத் தயங்கிட்டிருக்காங்க.

எங்ககிட்ட மோசடி செஞ்சுட்டு எஸ்கேப் ஆன கம்பெனி இடத்தை பெயரையெல்லாம் மாத்திட்டு அடுத்த மோசடியை ஆரம்பிச்சுட்டதா தகவல் வந்தது. அதனாலதான் இனிமேலாவது யாரும் இவங்களால் பாதிக்கப்படக் கூடாங்கிறதுக்காகவே நான் புகார் கொடுத்திருக்கேன். காவல்துறை இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை இழந்த எங்களுக்கு அதை மீட்டுத் தரணும்னு கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.

கவிதா பாரதி

நான்கு அணி, சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் கடும் போட்டி!

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக தற்சமயம் மங்கை அரிராஜன் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழான நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

கவிதா பாரதி தலைமையில் ஓர் அணி, தற்போதைய தலைவர் மங்கை அரிராஜன் தலைமையில் ஓர் அணி, தளபதி தலைமையில் ஓர் அணி, ஆதித்யா தலைமையில் ஓர் அணி என நான்கு முனைப் போட்டி என்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.