நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அசத்திய பிரபல நடிகை!

தென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான பூஜா ஹெக்டே (Pooja Hegde), அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளார். நியூயார்க் மேடிசன் அவென்யூவில் (Madison Avenue) நடைபெற்ற 44-வது ஆண்டு இந்திய சுதந்திர தின பரேட் (India Day Parade) விழாவில் அவர் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த விழாவில், பூஜா ஹெக்டே திறந்தவெளி வாகனத்தில் நின்றுகொண்டு இந்திய தேசியக் கொடியை அசைத்து உற்சாகமாக வலம் வந்தார். நியூயார்க் வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நமது நாட்டின் கலாச்சாரத்தைப் பெருமையுடன் கொண்டாடிய காட்சிகளைத் தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் அவர் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பூஜா ஹெக்டே, “நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின பரேட் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையும் கௌரவமும் ஆகும். நியூயார்க் வீதிகளில் இத்தனை இந்தியர்கள் ஒன்று கூடி நமது நாட்டைப் பெருமையுடன் கொண்டாடுவதைக் கண்டது மிகவும் சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் அசோசியேஷன்ஸ் (FIA) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், தெலுங்கு நடிகர் அடிவி சேஷ் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


