சென்னை: இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர், கொலை மிரட்டல்; இளைஞர் கைது

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் ஒருவர், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஜுமுதீன் என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்தநிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு மாதம் முன்பு பிரிந்தனர். ஆனால், அஜுமுதீன், அப்பெண்ணை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, காதலிக்குமாறு கூறி வற்புறுத்தி வந்தார். அதனால் இளம்பெண் மனஉளைச்சலுக்குள்ளாகினர். இதுதொடர்பாக தன்னுடைய குடும்பத்தினரிடமும் கூறினார்.

கைது

இந்நிலையில்15.08.2026-ம் தேதி தண்டையார்பேட்டை உள்ள டீக்கடை அருகே அப்பெண்ணும் அவரது தோழியும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அஜுமுதீன் அப்பெண்ணிடம் தன்னிடம் மீண்டும் பேசுமாறு கூறியிருக்கிறார்.

அதற்கு அந்தப் பெண் பேச மறுத்திருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது இளம்பெண்ணை, தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் அஜுமுதீன்.

இதுகுறித்து அப்பெண், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அஜுமுதீனை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தன்னை அப்பெண் காதலித்து ஏமாற்றி விட்டதாக அஜுமுதீன் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இதையடுத்து அஜுமுதீனை போலீஸார் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.