கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில், ஜடேஜா தனது 350-வது விக்கெட்டை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார். 

 

இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ரன்களுக்கு மேல் குவித்து, 350 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய எலைட் பட்டியலில் இணைந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தியாவின் ஜாம்பவான் கபில் தேவ் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தார். உலக அளவில் இயன் போத்தம் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

 

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இதற்கு முன் அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், கபில் தேவ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். 

 

இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் இலங்கை ஜாம்பவான் ரங்கனா ஹெராத் (433 விக்கெட்டுகள்) மற்றும் டேனியல் வெட்டோரி (362 விக்கெட்டுகள்) ஆகியோருக்கு  பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜடேஜா இப்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங்கில் 13 ரன்கள் எடுத்தாலும், பந்துவீச்சில் அவர் நிகழ்த்திய இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.