Toxic: அதில் என் மனைவிக்கு சங்கடம் இருக்க தான் செய்யும்.! - ரொமேன்ஸ் காட்சிகள் குறித்து யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படம், இம்மாதம் 26-ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் பேன் இந்தியா படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கான விளம்பரத்தில் படக்குழுவினர் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

Toxic Trailer - Yash

அப்படிச் சமீபத்தில் தனியார் செய்தி சேனல் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் யஷ், திரையில் ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடித்த காட்சிகளுக்குத் தனது மனைவி ராதிகா பண்டிட்டின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது என்பது குறித்துப் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "பொதுவாக திரையில் தன் துணை மற்றொருவருடன் நெருக்கமாக நடிப்பதைப் பார்க்கும்போது எந்தவொரு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ நிச்சயம் ஒரு சிறிய சங்கடம் இருக்கத்தான் செய்யும்.

இதில் பொய் சொல்ல எதுவுமில்லை, எல்லா பார்ட்னர்களுக்கும் அப்படித்தான் இருக்கும். எனக்கும் கூட இந்த மாதிரியான நெருக்கமான காட்சிகளில் நடிப்பது என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து செய்வது போலத்தான் இருந்தது.

Actor Yash
Actor Yash

அது எனக்கு சுலபமான விஷயமல்ல. ஆனால், இந்தக் கதைக்கு அது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. திரையில் இதைப் பார்த்து ராதிகா கண்டிப்பா சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். ஆனால் அதற்காக அவர் என் மீது கோபமாக இருக்கிறார் என்று அர்த்தமல்ல.

ஏனென்றால், அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிக முக்கியமானது. அவரும் ஒரு நடிகை என்பதால், கேமரா முன்னாடி நிற்பது கணவன் அல்ல, ஒரு நடிகன் மட்டுமே என்பதை அவர் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்," எனப் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.