நான், மம்மூட்டி, மோகன்லால் நடிக்கவிருந்த படம் கைவிட வேண்டிய சூழல்.! - பிருத்விராஜ் ஓப்பன் டாக்

பிருத்விராஜ் நடித்துள்ள கலீஃபா திரைப்படம் ஓணம் ரிலீஸாகத் திரைக்கு வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணியில் பிருத்விராஜ் ஈடுபட்டு வருகிறார்.

Khalifa Poster

நேற்றைய தினம் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்வில் பிருத்விராஜ், மம்மூட்டி, மோகன்லால் சேர்ந்து நடிக்கவிருந்த படத்தில் அவரும் நடிக்கவிருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

அந்த நிகழ்வில் பிருத்விராஜ் பேசுகையில், "முதலில் இந்த படத்தின் கதையைக் கதாசிரியர் என்னிடம் சொல்லும்போது, இயக்குநர் யாரென்று முடிவு செய்யப்படவில்லை.

ஒரு பக்காவான கமர்ஷியல் சினிமாவின் தன்மை அறிந்த ஒருவர்தான் இதை இயக்க வேண்டும் என்று யோசித்தபோதுதான் இயக்குநர் வைசாக்கின் பெயர் நினைவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் இணைந்து படம் செய்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.

Prithviraj
Prithviraj

அதனால் இந்த கூட்டணி அமைந்ததில் எனக்கு ரொம்பவே சந்தோஷம். இடையில் நானும் வைசாக்கும் இணைந்து சில படங்கள் பண்ண திட்டமிட்டிருந்தோம், ஆனால் பல காரணங்களால் அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

மேலும், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் நான் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவிருந்த மெகா ப்ராஜெக்ட்டையும் இயக்குநர் வைசாக் இயக்கவிருந்தார். ஆனால், ஷூட்டிங் தொடங்கும் கட்டத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதைக் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது," எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.