தளபதி விஜய் சாலை - முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பெயர் சூட்டும் பரந்தூர் - ஏகனாபுரம் மக்கள்!
சுதந்திர தினத்தன்று நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் - ஏகனாபுரத்தைச் சேர்ந்த மக்கள் விமான நிலையத்தை வரவிடாமல் தடுத்த முதல்வர் விஜய்க்கு நன்றி எனத் தீர்மானம் நிறைவேற்றி ஏகனாபுரத்தின் பிரதான சாலைக்கு தளபதி விஜய் சாலை என பெயரிடவும் கோரியிருக்கின்றனர்.
ஏகனாபுரம் மக்கள் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தில், ஏகனாபுரம் கிராமத்தின் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பாரம்பர்யமான குடியிருப்புகளைப் பாதுகாக்க 1100 நாட்களாகப் போராடி வந்த ஏகனாபுரம் கிராம விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதை தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக ஏற்று அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள தமிழக வெற்றி கழக தலைவர் தமிழ்நாடு முதல்வர் அமைச்சர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தக் கிராம சபை நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நமது ஏகனாபுரம் கிராமத்தைப் பாதுகாத்து கொடுத்த தமிழக வெற்றி கழக தலைவர் தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏகனாபுரம் பிரதான சாலைக்கு தளபதி விஜய் சாலை எனப் பெயரிட இந்தக் கிராம சபை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது எனக் கூறப்பட்டிருக்கிறது.

முதல்வராகும் முன்பு பரந்தூருக்கு நேரில் சென்று பரந்தூர் மண்ணில் விமான நிலையம் வரவிடமாட்டேன் விஜய் உறுதியளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

