பயமா? பதற்றமா? - 11 மதுபானங்களுக்கு விதித்த தடையை வாபஸ் பெற்ற தவெக அரசு - அதிமுக கேள்வி

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 13), தவெக அரசு என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்டைச் சேர்ந்த 11 வகையான மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தடைக்கு அந்த மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டதுதான் காரணம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் ஆய்விற்குப் பின்னே, இந்தத் தடை உத்தரவிடப்பட்டது.

ஆனால், நேற்றே (ஆகஸ்ட் 14), அதாவது தடை உத்தரவிட்ட ஒரே நாளில், தடை நீக்கப்பட்டுள்ளது.

அதிமுக

இதை விமர்சித்து அதிமுக ஐ.டி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

கொடுத்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது தமிழ்நாடு முதலமைச்சர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ்?

பயமா? பதற்றமா?

என்னவா இருக்கும்?".

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.