டிஜிட்டல் ஆவணப் பதிவில் புதிய மைல்கல்: வருகை இல்லா சொத்துப் பதிவு- சேவையைத் தொடங்கிய DRA நிறுவனம்!

டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டத்தின் கீழ், சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டி.ஆர்.ஏ (DRA), ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தனது தலைமை அலுவலகத்திலேயே தேவையான உள்கட்டமைப்பை நிறுவி, வாடிக்கையாளர்களுக்கான “வருகை இல்லா சொத்து ஆவணப் பதிவு”மற்றும் மின்னணு முறையிலான விற்பனை ஆவணப் பதிவு / சொத்து விற்பனை ஆவணப் பதிவு [DH1] தொடர்பான சேவைகளை பிப்ரவரி 2026 முதல் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம், மாநில அரசின் டிஜிட்டல் பதிவு கட்டமைப்பான STAR 2.0-ஐ ஏற்றுக்கொண்ட கிரெடாய் தமிழ்நாடு அமைப்பின் ஒரு உறுப்பினரான முதல் கட்டுமான நிறுவனம் என்ற பெருமையை DRA பெற்றுள்ளது. பதிவு அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே தொலைதூரத்திலிருந்தே சொத்துப் பரிவர்த்தனைகளை செய்து முடிப்பது என்ற இலக்கை நோக்கிய ஒரு மாபெரும் நகர்வாகும்.

DRA

வரவேற்கத்தக்க இந்த திருப்புமுனை நிகழ்வு குறித்து, DRA நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரஞ்ஜீத் ரத்தோட் கூறுகையில், “சொத்துப் பரிவர்த்தனைகளை பெருமளவில் நவீனப்படுத்தி, வீடு வாங்குபவர்களுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தும் இந்த முன்னோடியான ஸ்டார் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கும், பதிவுத் துறைக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.

இந்த முன்னெடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, சார்-பதிவாளர் அலுவலகம் பரிந்துரைத்த கட்டமைப்பிற்கு இணக்கமாக வீடு / சொத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமின்றி நேரடி வருகை இல்லா ஆவணப் பதிவை மேற்கொள்வதற்காகப் பிரத்யேகமான உள்கட்டமைப்பை டிஆர்ஏ நிறுவனம் நிறுவியுள்ளது.

அரசு வழிகாட்டுதல்களின்படி தேவையான டிஜிட்டல் மற்றும் இணக்க அமைப்புகளையும் உருவாக்கி, அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர்களுடன் இணைந்து பாதுகாப்பான, எளிமையான பதிவு செயல்முறையை உறுதி செய்துள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்வது, குறிப்பிட்ட நேர ஒதுக்கீடுகள் மற்றும் டோக்கன் அடிப்படையிலான பதிவு செயல்முறைகளை தவிர்ப்பதன் மூலம், வீடு வாங்குவதில் பாரம்பரியமாக, பல ஆண்டுகளாக இருந்து வந்த சிக்கலான நடைமுறைகள் தற்போது அவசியமாக இருக்காது. பயனர்களின் நிஜ அனுபவங்களின் அடிப்படையில் இந்த செயல்முறையை மேலும் மேம்படுத்தவும், எளிமையாக்கவும், பதிவுத்துறை தலைவரது அலுவலகம் மற்றும் டி.சி.எஸ் நிறுவனம் ஆகியவற்றுடனும் டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவனம் தீவிர முனைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஒரு வீட்டை வாங்குவது என்பது தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் நேரடி ஆவணச் சரிபார்ப்புடன் தொடர்புடைய, மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் அதிக மதிப்புடைய ஒரு முடிவாகும். இருப்பினும், பரிவர்த்தனைக்கான இந்த தொலைதூர டிஜிட்டல் பதிவு செயல்முறை ஒரு புதிய செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. வாங்குபவர்கள் இப்போது தொலைதூரத்திலிருந்தே தங்கள் பதிவுகளை முடித்துக் கொள்ள முடியும். வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் தங்களுக்குப் பிடித்தமான அல்லது மங்களகரமான நாட்கள் என தங்கள் வசதிக்கேற்ப பதிவு நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளும் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை இது வழங்குகிறது.

DRA
DRA

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட செயல்பாடுகள் மூலம் செயல்முறைச் சீரமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை இந்த முன்னெடுப்பு வலுவாக்குகிறது. இது ஆவணப்பதிவின் துல்லியத்தை மேம்படுத்துவதோடு, தவறுகள் மற்றும் முரண்பாடுகளுக்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. விரிவான உட்கட்டமைப்பு வசதிகளையும் மற்றும் கைப்பட செய்யும் மனித ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் சார்ந்திருப்பதையும் குறைப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் மிகவும் திறம்படப் பயன்படுத்தவும் இது உதவுகிறது. வீடு வாங்குவதை ஊக்குவிப்பதற்கு முதன்மையான உந்துசக்தியாக இது இல்லாவிட்டாலும், வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த வீடு வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு மிகச் சிறந்த மதிப்புக் கூட்டல் நடவடிக்கையாக இருப்பது நிச்சயம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.