ஸ்டைலான டிசைன்; ஸ்மார்ட்டான கேமரா... அசத்தலான AI அம்சங்கள் - அறிமுகமான vivo S2!
ஸ்டைல், கேமரா, பெர்ஃபார்மென்ஸ் என இன்றைய இளம் தலைமுறையினரின் ஸ்மார்ட்போன் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து, vivo நிறுவனம் தனது S Series-ன் புதிய மாடலான vivo S2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி இந்திய அறிமுகம் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் பிரத்யேக Launch Event மற்றும் Retailers’ Meet மூலம் vivo S2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களின் creativity மற்றும் self-expression-க்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள vivo S2, flagship-inspired design, advanced camera features, நீடித்த battery மற்றும் AI வசதிகளை ஒரே போனில் வழங்குகிறது.
பார்ப்பதற்கே பிரீமியம் லுக்!
vivo S2-ன் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று அதன் design. Silk White, Sapphire Blue, Regal Bronze என மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
Sleek finish-உடன் வரும் இந்த போனில் iconic camera design கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வெறும் 7.99 mm தடிமன் மற்றும் சுமார் 197 கிராம் எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் 6.83-inch 3D Curved AMOLED display, 1.5K Ultra HD resolution, 120Hz refresh rate, HDR10+ support மற்றும் 3000 nits local peak brightness போன்ற அம்சங்களுடன் வருகிறது. Movies, gaming, music மற்றும் video calls என அனைத்துக்கும் immersive viewing experience கிடைக்கும் வகையில் symmetrical dual speakers-ம் இடம்பெற்றுள்ளன.
Front-லும் Rear-லும் 4K... கேமராவில் கவனம்!
Content creators மற்றும் photography ஆர்வலர்களுக்காக camera segment-ல் vivo S2 பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
இதில் 50MP Sony Main Sensor camera மற்றும் 32MP Front Camera இடம்பெற்றுள்ளன. குறிப்பாக front மற்றும் rear ஆகிய இரண்டு கேமராக்களிலும் 4K video recording வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல... ஒரே நேரத்தில் front மற்றும் rear camera-களில் வீடியோ பதிவு செய்யும் Dual View Video வசதியும் இதில் உள்ளது. Vlog, interview, tutorial அல்லது reaction video எடுப்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், தேவையில்லாத பின்னணி பொருட்களை நீக்கி புகைப்படத்தை மேம்படுத்த உதவும் AI Erase 2.0 வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
Night, Portrait, Photo, Video, Panorama, Ultra HD Document, Slo-mo, Time-lapse, Supermoon, Pro, Food உள்ளிட்ட பல camera modes-ம் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Performance-க்கு Dimensity 7360-Turbo
வெறும் அழகான design மட்டும் இல்லாமல், performance-க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
MediaTek Dimensity 7360-Turbo processor மூலம் இயங்கும் vivo S2, 4nm process-ல் உருவாக்கப்பட்ட octa-core processor-ஐ கொண்டுள்ளது. இதன் maximum clock speed 2.5GHz வரை செல்கிறது.
மேலும், 3810 mm² vapor chamber கொண்ட Ultra-Large VC Smart Cooling System இடம்பெற்றுள்ளது. மொத்த cooling area 23,000 mm²-க்கும் அதிகமாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
8GB RAM உடன் 128GB மற்றும் 256GB storage variants-ல் vivo S2 கிடைக்கிறது. அதோடு, software optimisation மூலம் 8GB வரை Extended RAM வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
7050 mAh பேட்டரி... நீண்ட நேர பயன்பாடு!
நாள் முழுவதும் smartphone-ஐ அதிகமாகப் பயன்படுத்துபவர்களை கருத்தில் கொண்டு, 7050 mAh பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 44W FlashCharge மற்றும் Battery Life Extender technology இடம்பெற்றுள்ளது.
Streaming, gaming, navigation, meetings என தொடர்ச்சியான பயன்பாட்டிலும் நீண்ட நேரம் battery backup கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், IP68 மற்றும் IP69 dust & water resistance மற்றும் military-grade durability ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
AI வசதிகளிலும் அசத்தல்!
vivo S2-ல் OriginOS 6, Android 16 அடிப்படையில் இயங்குகிறது. இதில் பயனர்களின் அன்றாட வேலைகளை எளிதாக்கும் பல AI மற்றும் smart features கொடுக்கப்பட்டுள்ளன.
AI Creation மூலம் content-ஐ generate, rewrite, summarise, translate மற்றும் polish செய்ய முடியும். அதேபோல் AI Captions real-time transcription, translation மற்றும் meeting summaries போன்ற வசதிகளை வழங்குகிறது.
Google-ன் Circle to Search, Google Gemini, AI Smart Call Assistant உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், Shake & Share மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை விரைவாகப் பகிரவும், Origin Island மூலம் contextual notifications-ஐ பெறவும், Drag & Go மூலம் apps-க்கு இடையே content-ஐ நகர்த்தவும் முடியும்.

Make in India பெருமை!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் vivo சாதனங்களைப் போலவே, vivo S2-ம் Greater Noida-வில் உள்ள vivo manufacturing facility-யில் தயாரிக்கப்படுகிறது. இந்த facility-ல் சுமார் 8,000 ஆண்கள் மற்றும் பெண்கள் பணியாற்றி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை என்ன?
vivo S2-ன் 8GB + 128GB variant ₹39,999-க்கும், 8GB + 256GB variant ₹44,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 11, 2026 முதல் vivo-வின் அதிகாரப்பூர்வ website, Flipkart, Amazon மற்றும் partner retail stores மூலம் விற்பனை தொடங்கியுள்ளது.
Launch offers-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளில் 10% வரை instant cashback, 15 மாதங்கள் வரை Zero Down Payment, 10% வரை V-Upgrade Exchange Bonus உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. V-Shield Screen Damage Protection-ல் flat 40% discount, 1-year free extended warranty மற்றும் Jio-வின் 18 மாதங்களுக்கு 5000GB cloud storage + Google Gemini Pro offer ஆகியவையும் உள்ளன.
இந்த offers மற்றும் அவற்றுக்கான விதிமுறைகள் sales platform மற்றும் partner-களைப் பொறுத்து மாறுபடலாம்.
மொத்தத்தில், பிரீமியம் design + 4K front & rear camera + 7050 mAh battery + AI features + powerful processor என இளம் தலைமுறையினரின் style மற்றும் everyday performance இரண்டையும் சமநிலைப்படுத்தும் வகையில் vivo S2 உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


