நமக்கு அவார்டுலாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சுக்கிட்டேன், ஆனா..!- விகடன் மேடையில் பிரதீப்

தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை டிராகன், டியூட் படங்களுக்காகப் பிரதீப் ரங்கநாதன் வென்றார்.

விருது பெற்ற பிறகு பேசிய பிரதீப் ரங்கநாதன், "நான் நடிக்க வரும்போதே நமக்கு அவார்ட்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சுக்கிட்டேன்.

சினிமா விகடன் விருது விழாவில்...

ஏன்னா நான் நடிக்கிறது மாஸ் கமர்ஷியல் படங்கள். இதுதான் நான் நடிக்கணும்னு ஆசையும் படுறேன். அதைத் தாண்டி இங்கு இருக்கக்கூடிய டேலன்ட்ஸ்க்கு நடுவுல எனக்கு எப்படி அவார்டு வரும்னு எனக்கே தெரியும்.

அதனால எனக்கு அவார்டுலாம் வராதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால் லவ் டுடே படத்தில நடிக்கும்போது மட்டும் சிறந்த அறிமுக நடிகருக்கான அவார்டு கிடைக்கும்னு நினைச்சேன்.

விகடன் அவார்டுக்காகவும் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு அவார்டு கிடைக்கல. இதோட கனவு முடிஞ்சிருச்சு... இதுக்கு மேல அவார்டுலாம் கிடைக்காதுன்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன். ஆனா இந்த வருஷம் எனக்கு சிறந்த நடிகருக்கான அவார்டு கிடைச்சிருக்கு.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

அதுவும் ஒரு படத்துக்கு இல்ல, இரண்டு படத்துக்கு... வாழ்க்கையில நம்ம போட்ட கால்குலேஷன் வொர்க் அவுட் ஆகலனாலும், வாழ்க்கை நமக்கு போடுற கால்குலேஷன் நமக்கு ஒரு இடத்தைக் கொடுக்கும். அதனால எதாச்சும் மிஸ் ஆனா மனம் தளர வேணாம். கண்டிப்பா ஒருநாள் கிடைக்கும்" என்று பேசினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.