“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், இணையத்தில் தனது அனுமதியின்றி உலா வரும் 5,000-க்கும் மேற்பட்ட வலைதளப் பக்கங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள், போலி கணக்குகள் மற்றும் சாட்போட்டுகளை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அனுமதியின்றி உருவாக்கப்பட்ட ஆபாச மற்றும் டீப்ஃபேக் (Deepfake) பக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், நடிகை ஜான்வி கபூர் கோரியது போல, அவரைப் பற்றிய அனைத்து ரசிகர் பக்கங்களையும் (Fan Pages) முழுமையாக முடக்க முடியாது என்று நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இது குறித்துப் பேசிய நீதிபதி, “ரசிகர்கள் உங்களைப் பாராட்டலாம், விமர்சிக்கலாம் அல்லது கேலி செய்யலாம்; இது டிஜிட்டல் உலகின் ஒரு பகுதி. இதையெல்லாம் தடை செய்தால், நீங்கள் குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்” என்று அதிரடியாகக் கருத்துத் தெரிவித்தார். பொது வாழ்க்கையில் இருக்கும் ஒருவருக்கு விமர்சனங்களும் பாராட்டுக்களும் இயல்பானது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஆபாச மற்றும் போலியான உள்ளடக்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

