முதலில் நான் பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன், ஏனென்றால்..!- நடிகர் சூர்யா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

லக்கி பாஸ்கர் படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஸ்வநாத் & சன்ஸ் டீம்

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா சினிமாவிற்கு நடிக்க வந்தது குறித்துப் பேசியிருக்கிறார்.

"நான் சினிமாவிற்கு நடிக்க வருவேன் என்று எனக்கு தெரியவே தெரியாது. கேமராவுக்கு முன்னால் நிற்கப்போகிறேன் என்று ஐந்து நாள்களுக்கு முன்பு வரை எனக்கு தெரியாது. அதற்காக எந்தத் தயாரிப்பும் நான் செய்யவில்லை.

எல்லாவற்றையும் கேமராவின் முன்னால்தான் கற்றுக்கொண்டேன். ஆனால், அதுவே ஒரு பொறுப்பாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் வீட்டில் ஒரு பிரச்னை இருந்தது. அதனால் பணத்திற்காக மட்டுமே நடிக்க வந்தேன்.

சூர்யா
சூர்யா

ஆனால், எனக்குத் தொடர்ந்து கிடைத்த நிபந்தனையற்ற அன்பு... நான் தவறு செய்தபோதும், நான் கீழே விழுந்தபோதும், மோசமாகச் செயல்பட்டபோதும், அனைத்தையும் பாழாக்கியபோதும் கூட, எனக்கு அந்த அன்பு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. அதனால், நான் பொறுப்புடன் நடந்து கொண்டேன்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.