திருக்குறள், பன்னிரு திருமுறைகள் ஆய்வாளர்களுக்கு ரூ.1 லட்சம் விருது: தமிழ்நாடு அறக்கட்டளை அறிவிப்பு!

திருக்குறள் / பன்னிருதிருமுறைகள் தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் திருவாளர்கள் கந்தசாமி மாணிக்கம் மற்றும் பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ், தலா ரூ.1 லட்சம் வீதம் இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவரும் மேனாள் காவல்துறையின் தலைவருமான முனைவர் சி.சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் திருவாளர்கள் கந்தசாமி மாணிக்கம் மற்றும் பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ், தலா ரூ.1 லட்சம் வீதம் இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுகளுக்கான தகுதியான ஆராய்ச்சியாளர்களைத் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சைலேந்திர பாபு

விண்ணப்பிக்கும் முறை:

  • இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnfindia.org) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு அறக்கட்டளை, எண்.27, டைலர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் வருகிற 31.08.2026 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் அறக்கட்டளை முகவரிக்கு வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.