30 வயதுக்கு மேல் சாப்பிட வேண்டிய உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..


மனிதர்களுக்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் உடலுக்கு பல வகையான சத்துக்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் 30 வயதுக்கு பிறகு கண்டிப்பாக சாப்பிடவேண்டிய உணவுகள் பற்றி இங்கு பார்ப்போம்.

முட்டை: உயர்தர புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. தசை வலிமையை பாதுக்காக்க உதவும்.

பாதாம் மற்றும் வால்நட்: நல்ல கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்தவை. இதய ஆரோக்கியத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் உதவும்..

கீரை வகைகள்: இரும்புச்சத்து கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும். எலும்பு மற்றும் இரத்த ஆரோக்கியத்திற்கு உதவும்.

தயிர்: கால்சியம் மற்றும் புரோபயாட்டிக்ஸ் நிறைந்தது. எலும்புகளையும், குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

பழங்கள்: குறிப்பாக ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள் போன்றவை வைட்டமின் மற்றும் நார்ச்சர்த்து நிறைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அதேநேரம், சமநிலையான உணவு, உடற்பயிற்சி மற்றும் தேவையான தூக்கம் ஆகியவை சேர்ந்து நல்ல ஆரோக்கியத்தை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.