எங்களுக்கு அப்படியொரு பயம், முதல்வர் தினம் தினம்..!- எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு ஆனந்த் பதில்
பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற விவாதத் தொடரில், " முழு பயிர் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்களே அது என்ன ஆனது?" என்று உதயநிதி கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் விஜய், " அரசியலே நாங்கதான் என சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்றைய விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், " திமுக பேசிப் பேசி வளர்ந்த இயக்கம். எங்களை பார்த்து பேப்பர் படிக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்...நாங்கள் ஆட்சியில் இருந்த போது காலை 8 மணி வரைக்கும் அவ்வளவு டென்ஷனாக இருக்கும்.
பேப்பரில் மக்கள் பிரச்னைகளைப் பார்த்துவிட்டு அதிகாரிகள் மூலம் முதல்வர் எங்களைத் தொடர்புகொண்டு என்னவென்று கேட்பார். அதனால் 5 ஆண்டுகளும் டென்ஷனாகவே இருந்தோம். ஆனால், நீங்களெல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்களே?" என்று தவெகவை சாடினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எழுந்து பேசிய அமைச்சர் ஆனந்த், " சின்ன வாய்க்கால் பிரச்னை என்றாலும் அது சரியாகிவிட்டதா? என உடனே போன் போட்டு கேட்கக் கூடிய முதல்வர் இவர். உங்களுக்காகவாது 5 ஆண்டுகள்தான் டென்ஷன். எனக்கு தினந்தினம் டென்ஷன். சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


