ஈரான்: ``உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி? - இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆகியும், அவர் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் எவரையும் நேரில் சந்திக்கவில்லை.
மேலும், பொதுவெளியில் தோன்றாமலும், அவரது குரல் பதிவு வெளியாகாமலும் இருக்கிறது. ஈரானிய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வாயிலாக அவர் பெயரில் எழுதப்பட்ட அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இது சர்வதேச அளவில் அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை அதிகரிக்கச் செய்தது.
ஆனால், ஈரானிய அதிகாரிகள் தரப்பில், ``பிப்ரவரித் தாக்குதலில் மொஜ்தபாவிற்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவர் நாட்டின் விவகாரங்களைத் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகிறார்" என்த் தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிபர் மசூத் பெசெஷ்கியான் அளித்த பேட்டியில், ``உச்ச தலைவருடன் தற்போது தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால், அவருடனான சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்தது, அரசைத் தொடர்ந்து நடத்துவதற்கு அவரது இருப்பு ஒரு பெரிய பலமாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் மொஜ்தபா கமேனி படுகாயமடைந்துள்ளதாக மேலைநாட்டு மற்றும் எதிர்க்கட்சி உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இஸ்ரேலின் சேனல் 14 ஊடகம் மற்றும் ஈரான்வயர் செய்தி நிறுவனம் ஆகியவை ஈரானிய அரசு வட்டாரங்களை மேற்கோளிட்டு, ``மொஜ்தபா கமேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. ஈரானிய உயர்மட்ட தலைவர்களுக்கு இடையே அவரது மறைவு குறித்த தகவல்கள் பரவி வருகிறது." எனப் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

