Bigg Boss: எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை... - பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறும் போட்டியாளர், பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Bigg Boss - The Common Man

இந்த காமன் மேன் நிகழ்ச்சிக்குத் தற்போது டாப் 50 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து இறுதிக்கட்டப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்வின் நடுவர்களாக ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். மேலும், சீசன் 7-ல் கவனத்தைப் பெற்ற மாயா கிருஷ்ணன் இந்த காமன் மேன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறார்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஆரி அர்ஜுனன், "பிக்பாஸ் என் வாழ்க்கையையே மாற்றிய ஒரு மேடை. இந்த சீசனில் வெறும் முகமூடி அணிந்த நபர்களை நாங்கள் தேடவில்லை; உண்மையான, சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட நபர்களையே தேடுகிறோம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் போலியான எந்தவொரு பிம்பமும் நீண்ட காலம் நிலைக்காது. நேர்மையும் தன்னம்பிக்கையுமே ஒருவரை இறுதிவரை கொண்டு செல்லும்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Bigg Boss - The Common Man
Bigg Boss - The Common Man

தொடர்ந்து பேசிய ராஜு ஜெயமோகன், "நாம் நாமாக இருப்பதே போதுமானது என்பதைத்தான் பிக்பாஸ் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

பல வருடங்களாக இந்த வாய்ப்பிற்காகக் காத்திருந்த சாமானியர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் தனித்துவமான ஆற்றல் மக்களை நிச்சயமாகக் கவரும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஓவியா பேசுகையில், "மக்களுடன் எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை இந்த சீசன் சாமானிய மக்களுக்குக் கொடுக்கப்போகிறது.

தயக்கமில்லாத, இயல்பான, உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நபர்களையே மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.