நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

தெலுங்குத் திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள பிரபல இயக்குநர் ஸ்ரீனு வைட்லா (Sreenu Vaitla), சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்குமார் குறித்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகர் அஜித்தைத் தான் சந்தித்ததாகவும், அதற்கு முன்பே அவர் தனது இயக்கத்தில் வெளியான ‘தூடுகு’ (Dookudu) திரைப்படத்தைப் பார்த்துக் பாராட்டியிருந்ததாகவும் ஸ்ரீனு வைட்லா தெரிவித்துள்ளார். மேலும், அப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கும்படி அஜித் தன்னிடம் விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்த நேரத்தில் தான் ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘பாட்சா’ (Baadshah) படத்திற்கான பணிகளில் பிஸியாக இருந்ததாகவும், மொழிப் பரிச்சயம் இல்லாத காரணத்தினாலும் அந்தத் தங்கமான வாய்ப்பை நழுவவிட்டதாக அவர் மனம் திறந்துள்ளார். அஜித்துடன் பணிபுரியும் வாய்ப்பை இழந்தது தனக்கு இன்றும் ஒரு வருத்தமாக இருப்பதாகவும், இயக்குநர் ஸ்ரீனு வைட்லா அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா வட்டாரங்களில் தற்போது இந்தத் தகவல் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.