பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர் குறித்த புதிய காதல் வதந்தி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இம்முறை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் அவர் டேட்டிங் செய்வதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள பிரபல கபே (Cafe) ஒன்றிற்கு மிருணாள் தாகூர் வந்திருந்த நிலையில், சிறிது நேரத்தில் அதே இடத்திலிருந்து கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இருப்பினும், இந்த வைரல் வீடியோவில் இருவரும் ஒன்றாகப் பேசுவதோ அல்லது ஒரே நேரத்தில் அருகில் நிற்பதோ இடம்பெறவில்லை. எனினும், பிரபல சினிமா நடிகையும் இளம் கிரிக்கெட் வீரரும் ஒரே நேரத்தில் ஒரே கபேவில் காணப்பட்டதன் மூலம் இந்த வதந்தி காட்டுத்தீ போல பரவியது. இதற்கு முன்னதாக மிருணாள் தாகூரின் பெயர் சில நடிகர்களுடன் இணைத்துப் பேசப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் உலகத்துடன் அவரது பெயர் அடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து மிருணாள் தாகூரோ அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலோ தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது ஒரு விளம்பர ஷூட்டிங்கிற்கான சந்திப்பாக இருக்கலாம் அல்லது வெறும் வதந்தியாக இருக்கலாம் என்றும் சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.