சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவகாரத்தில் பெயர் அடிபட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த பாடகி கெனிஷா பிரான்சிஸ், கடந்த மே மாதம் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கம்பேக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Keneeshaa (@keneeshaa1)

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “வாழ்க்கை நம்மை நாம் இருக்க வேண்டிய இடத்திற்குச் சரியாகக் கொண்டு சேர்க்கிறது. எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும், பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி. சமூக ஊடகங்களை விட இது ஒரு குடும்பம் போன்ற உணர்வைத் தருகிறது. நான் அமைதியான இதயத்துடன் திரும்பி வந்துள்ளேன்” என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது புதிய பாடலான ‘ஓடி ஓடி’ (ODI ODI) குறித்துப் பதிவிட்டுள்ள அவர், “சில பாடல்கள் கேட்கப்பட வேண்டியவை, சில உணரப்பட வேண்டியவை. என் ஆன்மாவை வருடிய அந்தப் பாடலை நாளை நான் உங்களுடன் பகிர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். கெனிஷாவின் இந்த வருகைக்கு அவரது ரசிகர்கள் ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.