கரூர்: தலைமை ஆசிரியையைத் தாக்கிய ஆசிரியை; சஸ்பென்ட் செய்த அதிகாரி; வைரல் வீடியோவில் நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், சின்​னாண்​டாங்​கோ​வில் ஊராட்சி ஒன்​றி​யத் தொடக்​கப் பள்​ளி​யில் இடைநிலை ஆசிரியை​யாகப் பணிபுரிந்து வந்​தவர் கலைம​தி.

இவர், சரிவர பணிக்கு வரு​வ​தில்லை என்​றும், மாணவர்​களை அடித்து துன்​புறுத்​து​வ​தாக​வும் பெற்​றோர், ஆசிரியர் கழகத்​தினர் அண்​மை​யில் சைல்டு லைனில் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

அதன்​பேரில், மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அமைப்பினர் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். மேலும், இதுகுறித்த விசா​ரணை அடிப்​படை​யில் கலைமதி குறித்து அப்​பள்ளி தலைமை ஆசிரியை புவனா அறிக்கை அளித்​துள்​ளார்.

இதனால், ஆத்​திரமடைந்த கலைம​தி, வகுப்​பில் மாணவர்​களுக்கு பாடம் நடத்​திக்​கொண்​டிருந்த புவ​னாவை கன்​னத்​தில் கடுமையாக அறைந்​து, அவரைத் தாக்கி கீழே தள்​ளி​விட்​டுள்​ளார்.

karur

இதைப் பார்த்த மாணவ, மாணவி​கள் கூச்​சலிட்​டனர். இந்தச் சம்​பவம் வகுப்​பறை​யில் இருந்த கண்​காணிப்பு கேம​ரா​வில் பதி​வாகி இருந்​தது. இந்த வீடியோ சமூக வலைத்​தளங்​களில் வைரலானது.

இதையடுத்​து, இடைநிலை ஆசிரியை கலைமதியைப் பணி​யிடை நீக்​கம் செய்து மாவட்​டக் கல்வி அலு​வலர் சண்​முகவேல் உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியையைத் தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.