கார்த்திக் சுப்பராஜின் ‘டோரோதி’ பட டீசரை வெளியிட்டார் நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள 10-வது படமான ‘டோரோதி’ படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சர்வதேச அளவில் மதிப்புமிக்க டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகத் திரையிடலைப் பெறவுள்ள இப்படத்தின் டீசரை பிரபல நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Happy to unveil the teaser of Dorothy ! @karthiksubbaraj’s 10th film attains a monumental achievement of being selected by @TIFF_NET
You’ve made Tamil Cinema proud dear Karthik !
– https://t.co/rZoWaBYvQM
Worldwide Release – Sep 25th, 2026 !! @ilaiyaraaja @Sananth__…
— Dhanush (@dhanushkraja) August 5, 2026
“கார்த்திக் சுப்பராஜின் 10-வது படமான டோரோதி டொராண்டோ திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம்; தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் dear கார்த்திக்!” என்று தனுஷ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிராமிய பின்னணியும் மர்மங்களும் நிறைந்த இந்தத் திரைப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
– https://t.co/rZoWaBYvQM

