அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ புதிய போஸ்டர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் ஆவணப்படத்தின் திரையரங்க ரிலீஸ் விரைவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார், நடிப்புடன் மோட்டார்ஸ்போர்ட் பந்தயங்களிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். சர்வதேச அளவிலான பந்தயங்களில் கலந்துகொண்டு சாதனை படைத்து வரும் அஜித்தின் ரேசிங் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்ட ஆவணப்படம் ஒன்று உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ‘கிளாடியேட்டர்ஸ்: இன் பர்சூட் ஆஃப் சலஞ்சஸ்’ (Gladiators: In Pursuit of Challenges) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஷாலினி அஜித்குமாரின் கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய விளம்பரப் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. துபாய் மற்றும் ஐரோப்பிய சர்க்யூட்டுகள் உள்ளிட்ட சர்வதேச பந்தயங்களில் அஜித்குமார் ரேசிங் அணி எதிர்கொண்ட சவால்கள், வெற்றிகள் மற்றும் பின்னணித் தயாரிப்புகளை இப்படம் விரிவாகப் பேசவுள்ளது. ரேசிங் ஆர்வம் கொண்ட ரசிகர்களையும், அஜித்தின் சினிமா ரசிகர்களையும் ஒருசேர ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் திரையரங்க ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


