லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ புதிய ஆக்ஷன் ப்ரோமோ வெளியீடு: ஆகஸ்ட் 7-ல் தியேட்டர்களில் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக முழுநீள கதாநாயகனாக களம் இறங்கியுள்ள திரைப்படம் ‘டிசி’ (DC).

‘ராக்கி’, ‘சாணி காகிதம்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். மேலும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புகழ்பெற்ற ‘தேவதாஸ்’ நாவலைத் தழுவி, நவீன கால ஆக்ஷன் மற்றும் காதலின் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் ரிலீசுக்குக் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழுவின் புதிய அதிரடி ப்ரோமோ (Action Promo) தற்போது வெளியாகியுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆக்ஷன் காட்சிகளால் நிரப்பப்பட்ட இந்த புதிய ப்ரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் திட்டமிட்டபடி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகளாவிய திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.