ஜேசன் சஞ்சய்க்கு கைகொடுக்கும் எச்.வினோத்: ‘சிக்மா’ புரொமோஷனுக்குப் பின்னால் நடக்கும் ரகசியம்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக வலம்வரும் செய்தி ஜேசன் சஞ்சய் மற்றும் இயக்குனர் எச்.வினோத் பற்றியதுதான். ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ (Sigma) படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சில ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள ஜேசன் சஞ்சய், தனது தந்தை குறித்து எந்தவிதத் தயக்கமும் இன்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். தந்தை தற்போது உயர்ந்த பொதுப் பதவியில் இருப்பதால், குடும்பத்தினரின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும், தங்களது சொந்த முயற்சியின் மூலமே சாதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவரது முதிர்ச்சியான மற்றும் கச்சிதமான பதில்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள நிலையில், இதற்குப் பின்னால் ஒரு சினிமா பிரபலத்தின் மூளை இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, தளபதி விஜய்யின் வேண்டுகோளின்படி, இயக்குனர் எச்.வினோத் நேரில் சந்தித்து ஜேசன் சஞ்சய்க்கு மீடியா பேட்டிகளில் என்ன பேச வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகின்றது. தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஒரு பாலமாகவும் அவர் செயல்பட்டு வருகிறாராம். மேலும், ‘சிக்மா’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றால், எதிர்காலத்தில் ஜேசன் சஞ்சய்யை ஒரு கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் பொறுப்பை எச்.வினோத் ஏற்படுவார் என்றும் கோலிவுட் இன்சைடர்கள் முணுமுணுக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.jpg?resize=390%2C205)
