நானியின் ‘தி பாரடைஸ்’ பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உச்சக்கட்டம்!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் மாஸ் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடலா கூட்டணியில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் ‘தி பாரடைஸ்’ (The Paradise).

மாபெரும் வெற்றி பெற்ற ‘தசரா’ படத்திற்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் நானியுடன் இணைந்து பிரபல நடிகர் மோகன் பாபு மற்றும் கயாடு லோஹர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nani (@nameisnani)

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் அதிரடி மற்றும் மாஸான டீசர் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நானியின் மிரட்டலான ரக்கடான தோற்றமும், படத்தின் வித்தியாசமான காலகட்ட கதைக்களமும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இந்த டீசர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை உலகளவில் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த டீசர் வெளியீட்டு அறிவிப்பு ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.