இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.. முதல் போட்டி யார் யாருக்கு?
ஐபிஎல் தொடரை போலவே தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் பத்தாவது சீசன் இன்று ஆகஸ்ட் 4ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
இதுவரை 9 வெற்றிகரமான சீசன்களை கடந்துள்ள இந்த தொடர், மாநிலத்தின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த திறமைத் தளமாக விளங்கி வருகிறது. திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் பரபரப்பான தொடக்க ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான திருப்பூர் அணியும், சொந்த ஊர் மைதானத்தில் களமிறங்கும் திண்டுக்கல் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடரின் முதல் கட்ட போட்டிகள் திண்டுக்கல்லில் இன்று தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் சென்று கண்டு ரசிக்க வசதியாக, இதற்கான டிக்கெட்டுகள் மைதானம் மற்றும் குறிப்பிட்ட விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதைத்தொடர்ந்து, இரண்டாவது கட்ட லீக் ஆட்டங்களும் பிளே-ஆஃப் சுற்றுகளும் சென்னையில் வரும் ஆகஸ்ட் 18 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகளை காண தவறவிடும் ரசிகர்களின் வசதிக்காக, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 தமிழ் தொலைக்காட்சியில் அனைத்து போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. தமிழக இளம் வீரர்களின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


