Dare Devil: தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்குமார்; நீண்ட காத்திருப்புக்குப் பிறகு AK64 அப்டேட்!

நடிகர் அஜித்குமாருக்குக் கடந்தாண்டு குட் பேட் அக்லி படம் வெளியாகியிருந்தது. ஆனால், அந்தப் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை.

ரேஸிங் பக்கமே முழு கவனம் செலுத்தி வந்தார். தற்போது அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அஜித்குமார்

அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகிறார் என்பதை அவரே பல பேட்டிகளில் உறுதிப்படுத்தியிருந்தார்.

தற்போது அந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், படத்தின் தலைப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்கு டேர் டெவில் எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் மூலம் அஜித்குமாரின் மனைவி ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

பிரேவ் ஹார்ட்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, முதல் தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பைப் பகிர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், "34 ஆண்டுகாலத் தடைகளைத் தகர்த்து, கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்து, நட்சத்திர அந்தஸ்திற்குப் புதிய இலக்கணம் வகுத்த பயணம்! பேரார்வம், விடாமுயற்சி மற்றும் நிகரற்ற வசீகரத்தால் செதுக்கப்பட்ட ஒரு பயணம்!

இந்தப் படம் சிறப்பான ஒன்றாக இருக்கப்போகிறது. என் மீதான நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அஜித்குமார் சார்! தயாரிப்பாளர் ஷாலினி மேமிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.