இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கை அணிக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக திடீரென விலகியுள்ளது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 

 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த திடீர் மாற்றம் அணியின் திட்டமிடலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பும்ரா  தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்து, மீண்டும் தனது முந்தைய உடற்தகுதியைப் பெற சிறிது காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் குணமடைந்து அணியில் திரும்புவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையில், அவருக்குப் பதிலாக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் ஆகிப் நபி அல்லது விதர்பா  யஷ்  தாகூர் ஆகியோர் இந்திய அணியில் மாற்றாகச் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற முக்கிய வீரர்களும் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.