300 கோடி வசூலை நோக்கி தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’: தடைகளை தாண்டி மாஸ் சாதனை!

தமிழ் சினிமா உலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பு பல்வேறு எதிர்பாராத சவால்களையும், இணையத்தில் முழுப் படம் கசிந்ததையும் எதிர்கொண்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் சினிமா விரும்பிகள் ஆன்லைனில் முன்கூட்டியே அதைப் பார்த்த போதிலும், தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் மக்களின் கூட்டம் குறையவில்லை. தளபதி விஜய்யின் அசைக்க முடியாத மாஸ் மற்றும் வெறித்தனமான ரசிகர்களின் ஆதரவு காரணமாக, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

வெளியான முதல் வாரத்தில் பல கோடிகளைக் குவித்து மாஸ் காட்டிய இப்படம், தற்போது தனது இரண்டாவது வார இறுதிப் பகுதியிலும் மிகச் சிறப்பான வசூலைப் பதிவு செய்து வருகிறது. உலகளாவிய ரீதியில் பாக்ஸ் ஆபிஸில் 260 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் கடந்துள்ள ‘ஜனநாயகன்’, மிக விரைவில் 300 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை எட்டத் தயாராகி வருகிறது. இதன் மூலம், பிகில், வாரிசு, லியோ, தி கோட் வரிசையில் தளபதி விஜய்யின் சினிமா பயணத்தில் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ஐந்தாவது திரைப்படமாக சாதனைப் படைக்கவுள்ளது. எந்தவொரு திரைப்படமும் இதுவரை சந்திக்காத இவ்வளவு பெரிய நெருக்குதல்களையும், சர்ச்சைகளையும் கடந்து, வெறும் நடிகரின் மீதுள்ள அன்புக்காக மட்டுமே மக்கள் திரையரங்குகளுக்குத் திரண்டு வருவது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.