Anupama: என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? - செய்தியாளரின் கேள்விக்கு அனுபாமா பதில்

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு கிரேஸி கல்யாணம் படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவில், "யாரோ ஒருவரின் அனுமதிக்கும், தலைப்பிற்கும் காத்திருக்கத் தேவையில்லை.

View this post on Instagram

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

என் அமைதியைக் கண்டடைய சில முடிவுகளைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. இனிப் பயமில்லை, என்னுடைய குரலை நான் தேர்ந்தெடுக்கிறேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு பற்றி கிரேஸி கல்யாணம் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வில் அனுபாமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதில் தந்தவர், "அது என்னுடைய சோஷியல் மீடியா கணக்கு. அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்.

நான் என் கவலையைக் கொட்டுவதற்காக அப்படிப் பதிவிடவில்லை. ஒரு பெண் தன் வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு மாற்றத்தைப் பற்றித்தான் நான் பேசினேன். அதைச் செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

Anupama Parameswaran | அனுபமா பரமேஸ்வரன்

என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அது எங்களது இன்ஸ்டாகிராம் கணக்கு, எங்களுக்குப் பிடித்ததை நாங்கள் பதிவிடுகிறோம்.

கடந்த ஓராண்டு காலம் எனக்குச் சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது நான் மிகவும் நல்ல மனநிலையில் இருக்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.