The Odyssey: என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்! - தி ஒடிஸி குறித்து கமல்ஹாசனின் பார்வை

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.

கிறிஸ்டோபர் நோலன் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை கமல்ஹாசன் பெரிதும் விரும்பிப் பாராட்டுவார்.

The Odyssey Movie

கடந்த 2018-ம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலனைக் கமல்ஹாசன் நேரில் சந்தித்தபோதுகூட, ஃபிலிமில் எடுக்கப்பட்ட டன்கிர்க் படத்தைச் டிஜிட்டல் வடிவில் பார்த்ததற்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

அத்தோடு, கமல்ஹாசனின் ஹே ராம் படத்தின் டிஜிட்டல் வெர்ஷனை அவருக்கு அனுப்பியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, கமல்ஹாசனின் பாபநாசம் படத்தைப் பார்த்துப் பாராட்டியிருந்தார் நோலன்.

தி ஒடிஸி திரைப்படம் வெளியாகி, உலகமெங்கும் வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படத்தை பற்றி பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவை தி ஒடிஸி படத்தின் கமல்ஹாசனின் அனுபவம் எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "ஹோமர் இதை கற்பனையாகக் கண்டார். நோலன் இதைச் செய்ய துணிந்தார். நான் இதைக் கரவொலி எழுப்பிப் பாராட்டுகிறேன்.

View this post on Instagram

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

சினிமா விரும்பிகளே, இந்த திரைப்படம் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.

தி ஒடிஸி திரைப்படம் உலகம் முழுவதும் தனது பிரம்மாண்டப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தத் திரைப்படத்திற்கான எனது பாராட்டு உரை இந்தியத் திரையரங்குகளில் ரசிகர்களைச் சென்றடையும். அதை விரைவில் இங்கேயும் பகிர்ந்துகொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.