Simran: 10 வயது மாற்றுதிறனாளி சிறுமிக்கு செய்த உதவி! - சிம்ரன் செய்த நெகிழ்ச்சி செயல்

நடிகை சிம்ரன் 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை நேரில் சந்தித்து, அந்த சிறுமியின் கனவை நனவாக்கியிருக்கிறார்.

பிறக்கும்போதே ஒரு கையுடன் பிறந்து நிஷா, நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர். எதையும் தடையாக நினைத்திடாமல் தன்னம்பிக்கையோடு, நடனமாடி சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

Simran - Nisha

நிஷா நடனமாடிய இந்தக் காணொளிகளை சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து, அவரின் திறமையை பலர் அறியச் செய்திருக்கிறார் தன்னார்வலர் ஆஷிக்.

நடிகை சிம்ரனிடம், நிஷாவைப் பற்றியும், அவருக்கு நடனத்தின் மீதிருக்கும் ஆர்வத்தைப் பற்றியும், நிஷாவுக்கு இருக்கும் ஆசைகள் பற்றியும் ஆஷிக் தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேட்ட சிம்ரன், நிஷாவை நேரில் அழைத்துச் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பில், நிஷா சிம்ரனின் பாடல்களுக்கு அவருடனேயே சேர்ந்து நடனமாடியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, நிஷாவுக்கு சைக்கிள் தேவை என்பதைத் தன்னார்வலர் ஆஷிக் மூலம் அறிந்துகொண்ட சிம்ரன், ஒரு புதிய சைக்கிளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

Simran - Nisha
Simran - Nisha

அத்தோடு, நிஷாவிடம் பேசிய நடிகை சிம்ரன் படிப்பில் மட்டுமே முதன்மையாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும், கனவுகளைத் தன்னம்பிக்கையுடன் பின்தொடர வேண்டும் எனவும் ஊக்கமளித்திருக்கிறார்.

நிஷாவைச் சிம்ரன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி, இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.