கணவன் என்னை விவாகரத்தே செய்தாலும் அந்தப் பையன்தான் வேணும் - மனைவி பிடிவாதம்; கணவன் விபரீத முடிவு

சண்டிகரைச் சேர்ந்த மோனு என்பவர் 8 ஆண்டுகளாக கோமல் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். எட்டு ஆண்டுக்குப் பிறகு இரு குடும்பத்தின் சம்மதத்தின் பேரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கோமல் வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். மோனு ஆட்டோ ஓட்டினார். கோமலிடம் டியூசன் படிக்க சன்னி என்ற 20 வயது மாணவன் வந்தான். அவனுக்கும், கோமலுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட ஆரம்பித்தது.

இருவருக்கும் இடையேயான உறவு திருமணம் தாண்டிய உறவாக மாறியது. இது மோனுவிற்குத் தெரிய வந்தது. இதையடுத்து இந்த உறவைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் கைவிட முடியாது என்று கோமல் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இதனால் இது குறித்து பேச இரு குடும்பத்தினரின் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இரு தரப்பினரும் கோமலிடம் எடுத்து கூறினர். ஆனால் கோமல் அவர்களின் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டார்.

எனது கணவன் என்னை விவாகரத்து செய்தாலும், மாணவனைக் கைவிடமாட்டேன் என்று திட்டவட்டமாக கோமல் கூறிவிட்டார். அதோடு குழந்தையை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் தனிமையில் இருந்த மோனு வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தார்.

மன அழுத்தம் காரணமாக அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோமல் மீது மோனுவின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் கோமல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.