தேசிய விருது சர்ச்சை: நடிகர் தனுஷின் அதிரடியான நேரடிப் பதில்!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், தேசிய விருது பெற்ற கலைஞராகவும் வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. பலரும் மெய்யழகன் மற்றும் மகாராஜா போன்ற சிறந்த படங்கள் விடுபட்டுவிட்டதாகக் கருத்து தெரிவித்த நிலையில், இந்த சர்ச்சை குறித்து நடிகர் தனுஷ் முதல்முறையாக வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து தனுஷ் கூறுகையில், “கடந்த ஆண்டு வெளியான ‘மெய்யழகன்’ மற்றும் ‘மகாராஜா’ போன்ற படங்கள் ‘ராயன்’ படத்தை விட சிறந்த படங்களில் சிலவாக இருந்தன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், புதுப்பேட்டை, வடசென்னை, கர்ணன், மரியான் மற்றும் ராஞ்சனா போன்ற படங்கள் வெளியானபோது, அவற்றுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை என்று வலுவாக ஆதரிக்க யாரும் முன்வரவில்லை. இன்று, கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் எனது தேசிய விருதை எதிர்க்கிறார்கள். ஆனால், உண்மையாகவே தகுதியான எனது பல படங்கள் தேசிய விருதுகளைத் தவறியபோது, 10 சதவீத மக்கள் கூட அதைப் பற்றிப் பேசவில்லை. தட்டி குடுங்க.. தட்டி விடாதீங்க” என்று தனது தரப்பு நியாயத்தைப் பதிவு செய்துள்ளார். இவரது இந்தப் பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


