எங்களை வெளியேற்ற கூடாது - தேனியில் கடையடைப்பு போராட்டத்தில் இறங்கிய மலைக் கிராம மக்கள்

தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு, மேகமலை, கண்டமநாயக்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.

இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் 2021ல் அறிவிக்கபட்டது. இந்தப் புலிகள் காப்பகத்தைக் காரணம் காட்டி அங்கிருக்கும் மக்களை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் மக்களை வெளியேற்றுவதற்காக துணை ராணுவ படையை நிலை நிறுத்தலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இந்தப் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட  கடைகளை அடைத்து, வனத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு மலைக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த மக்களுக்கு ஆதரவாக ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு, பிள்ளையார் கோவில் பகுதிகளில் வசிக்கும்  விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் உட்பட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

திமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்பு

உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போராட்டத்தில் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் முறுக்கோடை ராமர் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.