Massive Box Office Hit: முதல் வாரத்தில் ரூ.107 கோடியைக் கடந்த கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’!

ஹாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற மற்றும் முன்னணி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘தி ஒடிஸி’ (The Odyssey) திரைப்படம் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகளாவிய திரையரங்குகளில் வெளியான முதல் வாரத்திலேயே இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்தியாவில் இப்படம் முதல் வார இறுதியில் சாதனை அளவிலான ஐமேக்ஸ் (IMAX) மற்றும் பிரீமியம் லார்ஜ் பார்மட் (PLF) திரையரங்கக் திரையிடல்களின் பலத்தால் மிரட்டலான வசூலைப் பதிவு செய்தது. ஆரம்ப வார இறுதியிலேயே ரூ.61.30 கோடி நெட் வசூலைக் குவித்த இப்படம், சினிமா வர்த்தக வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து முதல் வார முடிவில் இந்தியாவில் இதன் மொத்த நெட் வசூல் தோராயமாக ரூ.90.30 கோடியைக் கடந்துள்ளது. மேலும், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க வட்டாரங்களின் கிராஸ் வசூல் கணக்கீட்டின்படி, இப்படம் இந்தியாவில் ரூ.107 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி, உலகளாவிய வசூலில் இப்படம் வெறும் 7 நாட்களில் 332 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்பயணத்தில் மிகப்பொிய உலகளாவிய தொடக்க வசூல் சாதனைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐமேக்ஸ் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது படத்தின் ஒட்டுமொத்த லாபத்திற்கும் வசூல் சாதனைக்கும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. பிரீமியம் பார்மட் அனுபவத்தைத் தேடி ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருவதால், வரவிருக்கும் வார இறுதி நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் வசூல் சாதனையானது கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களான ‘டெனெட்’ (Tenet), ‘ஓபன்ஹைமர்’ (Oppenheimer) மற்றும் ‘இன்டர்ஸ்டெல்லர்’ (Interstellar) திரைப்படங்களின் ஆரம்ப நாள் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றுடன் ஒப்பிடும்போது ‘தி ஒடிஸி’ படம் உலகளவிலும் இந்தியாவிலும் பாக்ஸ் ஆபிஸில் மிகவேகமாக வசூலைக் குவித்து புதிய பாக்ஸ் ஆபிஸ் மைல்கல்லை எட்டியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.