Vimal: அதை பற்றி எனக்கு தெரியாதுங்க! - செக் மோசடி வழக்கு பற்றிய கேள்விக்கு விமலின் பதில்

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மன்னர் வகையறா திரைப்படத்தைத் தயாரிக்கப் ஃபைனான்சியர் கோபியிடம் விமல் கடன் வாங்கியிருந்தார். அந்தத் தொகைக்காக விமல் வழங்கிய செக் வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், கோபி செக் மோசடி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மன்னர் வகையறா

அந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. விமல் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை கமலா திரையரங்கிற்கு ஜனநாயகன் திரைப்படம் பார்க்க வந்த நடிகர் விமல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், "இன்னைக்கு ஜனநாயகன் திரைப்படத்தை எல்லாரும் வந்து பார்த்தோம். ரசிகர்களோட பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. முன்னாடியே ரிலீஸ் ஆகியிருந்தாக்கூடத் தளபதி படமா இருக்கும். இப்பவும் தளபதி படம்தான்.

இப்ப நம்ம தமிழ்நாட்டோட சி.எம். படத்தைப் பார்த்த ஒரு சந்தோஷம். ரசிகர்கள் எல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தாங்க. என்னையும் ரசிகர்கள் எல்லாம் விடல.

டான்ஸ் ஆடியே ஆகணும்னு பாட்டை ஒன்ஸ் மோர் கேட்டு, ரெண்டு வாட்டியும் அந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரொம்ப ஜாலியா இருந்தது. ரசிகர்களும் அதுமாதிரி நிறைய செண்டிமெண்ட் சீன்களும் ரொம்ப நல்லா இருந்தது. இந்தப் படத்துல பார்த்தது அப்படியே நிஜமாயிடுச்சு!" என்றார்.

விமல்
விமல்

தொடர்ந்து அவரிடம் செக் மோசடி வழக்கு தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர், "அதைப் பத்தி எனக்குத் தெரியாதுங்க. ரைட், நன்றி வணக்கம். என்னையெல்லாம் தளபதி மாதிரி அழ வைக்கவே முடியாது!" என்று ஜாலியாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.