Jana Nayagan: ஒரே தளபதியோட இந்தக் கடைசி ஆட்டத்தை, FDFS-ஆ பார்க்க போறேன்! - அர்ச்சனா கால்பத்தி | Live Updates
ஜனநாயகன்: மதுரையில் விடிய விடிய ரசிகர்கள் திரையரங்கு முன்பாக கொண்டாட்டம்!
View this post on Instagram
ஜனநாயகன் FDFS: ரசிகர்கள் கொண்டாட்டம்! | இடம்: திருநெல்வேலி, ராம் சினிமாஸ்
View this post on Instagram
பகவந்த் கேசரி திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி பதிவு
"இத்தனை வருடங்களாக ரசிகர்களுக்கு எண்ணற்ற மறக்க முடியாத தருணங்களை வழங்கியிருக்கிறீர்கள் விஜய் சார். உங்கள் இந்த அற்புதமான பயணத்தில் ஜனநாயகன் திரைப்படம் மற்றொரு பொக்கிஷமான மைல்கல்லாக அமையும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
தளபதியிலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வரை, ஜனநாயகன் என்ற பெயருக்கு நீங்கள் முழுமையாக வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள்!
கே.வி.என் ஃபிலிம்ஸ், சகோதரர் எச். வினோத் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இந்தப் படம் வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று, அதற்குத் தகுதியான அனைத்து அன்பையும் பெற வேண்டுகிறேன்."
அர்ச்சனா கல்பாத்தி பதிவு
AGS என்டர்டெயின்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி பதிவு
"(துப்பாக்கி) படத்துக்கு அப்புறம் பல வருஷம் கழிச்சு, எந்தச் சூழ்நிலையிலும் மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்குன படம் இதுதான்! எனக்கு எப்பவும் பிடிச்ச ஒரே தளபதியோட இந்தக் கடைசி ஆட்டத்தை, AGS தியேட்டர்ல கடைசி First Day First Show (FDFS)-ஆ பார்க்க போறேன்!
இதைச் சாத்தியமாக்கின ஜெகதீஷ் அவர்களுக்கு ரொம்ப நன்றி! நாளைக்கு தியேட்டர்ல கொண்டாட்டம் வேற லெவல்ல இருக்கப்போகுது!

ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் போஸ்டர், முதல் பாடல், ஆல்பத்தில் நீங்கள் பாடிய பாடல், ஆடியோ லான்ச், (இன்றும் நான் கேட்கும்) உங்களின் குட்டி ஸ்டோரிகள், டிரெய்லர் மற்றும் ஒவ்வொரு சாதனைகளுக்காகவும் ட்விட்டரில் நடந்த ரசிகர்களின் சண்டைகள் முதல் அந்தக் கடைசி முதல் நாள் முதல் காட்சி (FDFS) தருணம் வரை...
எனது சிறுவயது முதல் வளர்ந்த காலம் வரை உங்களின் ஒவ்வொரு திரைப்படத்தையும் நான் எப்போதுமே மனதிற்கு நெருக்கமாகப் போற்றுவேன்.
எங்களை மகிழ்வித்ததற்கும், எங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தந்ததற்கும், எங்களுக்கு ஊக்கமாக இருந்ததற்கும், இப்போது எங்களை வழிநடத்துவதற்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். நமது தளபதியை, நமது மாண்புமிகு முதலமைச்சரை, நமது ஜனநாயகனை இன்று கொண்டாடுவதற்கான நேரம் வந்துவிட்டது! நாம் அனைவரும் இதை வரலாறாக்கக் கொண்டாடுவோம்!
கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருந்தது.
ஆனால், சென்சார் பிரச்னைகளால் திரைப்பட ரிலீஸ் தள்ளிச் சென்றுகொண்டே இருந்தது.
இப்போது அனைத்துப் பிரச்னையும் முடிந்து, இன்று (ஜூலை 23) நடிகரும் முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்தத் திரைப்பட ரிலீஸ் குறித்த அனைத்து அப்டேட்களையும் இங்கே காணலாம்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


