Jana Nayagan Exclusive: நிறைய பேர் ஜன நாயகன் படத்தைப் பார்த்துவிட்டார்கள்; ஆனால்... - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Jana Nayagan - Vijay

படத்தின் ரிலீஸையொட்டி நம் சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு எச். வினோத் பேட்டியளித்திருக்கிறார். இந்தப் பேட்டியில் ஜன நாயகன் லீக் தொடர்பாக அவர் பேசியிருக்கிறார்.

எச். வினோத் பேசுகையில், "எனக்கு இது கனவு போல இருக்கிறது. அப்போது விஜய் சார் முதல்வராவார் என யாரும் சொல்லவில்லை. நானும் அப்போது அப்படி நினைக்கவில்லை. அவர் தேர்தலில் வெற்றி பெற்றதே பயங்கரமான விஷயம். அவர் வெற்றியை நாம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம்.

அனுபவமாகவே இத்தனை தருணங்கள் இவ்வளவு குறைவான நேரத்தில் நடந்தது கிடையாது. இது தேர்தலுக்கு முன்பு எடுத்த திரைப்படம். இப்போது படத்தில் அதே கண்டெண்ட்தான் இருக்கிறது.

அதனை மாற்ற முடியாது. சென்சாரில் அதற்கு அனுமதிக்கவில்லை. படத்தினுடைய கருத்தில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள்.

H Vinoth Interview - Jana Nayagan
H Vinoth Interview - Jana Nayagan

அதனால் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை. லீக் ஆன வெர்ஷனிலிருந்து, இந்தப் படத்தில் புதிய விஷயங்கள் நேச்சுரலாகவே அமைந்திருக்கின்றன. ஆனால், நிறைய பேர் ஜன நாயகன் படத்தைப் பார்த்துவிட்டார்கள். அவர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்ப்பார்களா எனத் தெரியவில்லை.

அவர்கள் விஜய் சாரைப் பார்க்க வேண்டும் என நினைத்து தியேட்டருக்கு வர வேண்டும். ஜன நாயகன் வெறும் கமர்ஷியல் திரைப்படம் மட்டும் கிடையாது. இதில் தவெக புகழ் பாடும் விஷயங்கள் மட்டும் கிடையாது.

இதில் சென்சிடிவ்வான அரசியலைப் பேசியிருக்கிறோம். அந்தக் கண்டெண்டைப் பார்த்து டிஸ்கஸ் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.