Jana Nayagan: ஜன நாயகன் லீக் ஆனபோது விஜய் சார் என்கிட்ட சொன்ன விஷயம்... - அ. வினோத்

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் பெரும் தடைகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Jana Nayagan - Vijay

படத்தின் ரிலீஸையொட்டி நம் சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு அ. வினோத் பேட்டியளித்திருக்கிறார். இந்தப் பேட்டியில் ஜன நாயகன் தொடர்பாகப் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.

இந்தப் பேட்டியில், "அஜித் சார் எப்போதும் அவருடைய இயக்குநர்களிடம், அடுத்து விஜய் சார், ரஜினி சாருக்கு படம் பண்ணுங்கள் என்றுதான் சொல்வார். அஜித் சார் எப்போதும் அவருடைய இயக்குநர்களை குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்ப்பார்.

சமீபத்தில் நான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருந்தேன். அதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் எங்களுக்கு மெண்டாராகவும் இருக்கிறார். அஜித் சார், விஜய் சார் அவ்வளவு உயரத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம்.

Jana Nayagan - H Vinoth
Jana Nayagan - H Vinoth

படத்தின் ரிலீஸ் தாமதமாகி, படம் லீக் ஆன பிறகு விஜய் சார் என்னை அழைத்து கவலைப்பட வேண்டாம்; இது மாதிரிதான் நடக்கும் என ஆறுதல் தெரிவித்தார். படத்தில் நிறைய அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்கின்றன.

அந்த வசனங்கள் மிகவும் முக்கியமானவை என்பேன். ஜன நாயகன் இப்போது மட்டுமல்லாமல், இன்னும் பல வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் இருக்கும் விஷயங்களுக்காகப் பேசப்படும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.