திருமணத் தடை நீக்கும் அற்புதமான சுயம்வர பார்வதி ஹோமம்! - நாளை சேலம் காவடி பழநி ஆண்டவர் சந்நிதியில்!

வாழ்க்கை அர்த்தப்படவும், வாழையடி வாழையாக வாரிசுகள் தொடர்ந்து வளரவும் திருமணம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. அழகு, திறமை, அந்தஸ்து, ஐஸ்வர்யம் எல்லாம் இருந்தும் சிலருக்குத் திருமணப் பாக்கியம் கிடைக்காமல், ஏதேதோ காரணங்களால் தடைப்படுகிறது.

ஜாதகக் கோளாறு, பித்ரு தோஷங்கள், முன்வினைகள் என எத்தனையோ காரணங்களால் திருமணம் நடைபெறாமல் இருக்கும் வரன்களுக்கு நமது ஆன்மிகம் உதவி செய்கிறது.

ஆம்! திருமண வரம் அருளும் திருத்தலங்களில் நிகழும் சுயம்வர பார்வதி ஹோம வைபவங்களிலும் வழிபாடுகளிலும் கலந்துகொண்டால், உடனடியாக நல்ல வரன் கிடைக்கும் என்பது புராண காலம்தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.

சுயம்வர பார்வதி ஹோமம்

பார்வதிதேவி, ஹிமவான் மகளாக அவதரித்த வேளையில் மீண்டும் ஈசனை மணக்க ரிஷிகளிடம் வழிகாட்டுதல் கேட்டார். அவர்கள் இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தைப் பற்றிக் கூறினர். அதற்கான மந்திரங்கள் நாரதரால் உபதேசிக்கப்பட்டது. தேவியனவள் இந்த ஹோம வழிபாடு செய்து, அதன் பலனாக ஈசனை மணம் செய்து கொண்டாள் என்கிறது புராணம்.

சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். எல்லா வசதிகளும் இருந்தும் ஏனோ காரணத்தால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும் அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஒருவருக்குத் திருமணம் தடைபடுகிறது என்றால், பெரும்பாலும் ஜோதிட அமைப்பும் பித்ரு தோஷமுமே காரணம் என்பார்கள். இந்த இரண்டு வகை தோஷங்களையும் நீக்கி அருள் செய்யும் வரமாக நடக்க இருக்கிறது இந்த சுயம்வர பார்வதி ஹோமம்.

ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தில் பதிவு செய்து கொண்டு மானஸீகமாக வேண்டிக்கொண்டாலே திருமணம் வரம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த ஹோமத்துக்குப் பிறகு அளிக்கப்படும் பஸ்பம், குங்குமத்தை ஒரு மண்டல காலத்துக்கு தினமும் தினமும் இட்டு வந்தால், திருமணத் தடை நீங்கி சீக்கிரமே நல்ல துணை கிடைக்கும் என்கிறார்கள் ஆன்றோர்கள். இப்படிப்பட்ட மகத்தான ஹோமம் சேலம் காவடி பழநி ஆண்டவர் ஆசிரமத் திருக்கோயிலில் நடைபெற இருக்கிறது.

சேலம்-காவடி பழநியாண்டவர்  கோயில்
சேலம்-காவடி பழநியாண்டவர் கோயில்

நாள்தோறும் வழிபாடுகள்... பக்தர்களின் கூட்டம் என களைகட்டி இருக்கும் சேலம் ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆசிரம ஆலயம், சேலம் ஜங்ஷன், ஸ்டீல் பிளான்ட் சாலையில், ஜாகீர் அம்மாபாளையம் ஸ்ரீ வீரமாதுருபுரியில் அமைந்துள்ளது.

சேலத்தில் குறைகள் தீர்க்கும் கோயிலாகவும் வியாதிகளை போக்கும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது. முருகனின் ஒன்பதாம் படை வீடு என்று போற்றப்படும் இத்தலத்தில் பல நூறு தெய்வங்கள் சந்நிதி கொண்டுள்ளன. மேலும் இது அருள்மிகு செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோர் அருள்பாலிக்கும் சித்தர்கள் தலமாகவும் அமைந்து உள்ளது. இங்கு சகல தெய்வங்களும் வீற்றிருப்பதால் எல்லா நாள்களும் இங்கு விழாக்கோலம் கொண்டு சிறந்து விளங்குகிறது.

ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஸ்ரீதீர்த்த பிள்ளையார் தொடங்கி ஷீரடி சாயிபகவான் வரை இங்கு எல்லா தெய்வங்களின் திருச்சந்நிதிகளும் உள்ளன. அதிலும் வள்ளி, தெய்வயானை சமேத ஸ்ரீகாவடி பழனியாண்டவர், ஸ்ரீசர்வலோகநாயகி சமேத சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர், ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீதிருப்பதி வேங்கடாசலபதி, பக்த ஆஞ்சநேயர், ஹயக்ரீவர் சந்நிதிகள் இங்கு மிக மிக விசேஷம் எனலாம். வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு மட்டுமே 108 திருமகள் வடிவங்கள் தனித்தனி சந்நிதிகளில் அருளுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

சுயம்வர பார்வதி ஹோமம்

இத்தலத்தில் நடைபெறும் சுயம்வரபார்வதி ஹோமத்தில் கலந்துகொண்டால் நிச்சயம் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. சக்தி விகடனும் காவடி பழநியாண்டவர் ஆசிரம நிர்வாகமும் இணைந்து நாளை (21.7.26) அன்று சுயம்வர பார்வதி ஹோமம் நடத்த இருக்கிறார்கள். இந்த ஹோமத்தில் நீங்களும் கலந்துகொள்ளலாம். இதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டது. மேலும் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் பதிவு செய்துகொண்டால்போதுமானது (வேறு எந்தத் தகவலும் அனுப்பப்படமாட்டாது. பதிவு ஒன்றே போதுமானது.) நீங்கள் நேரடியாக கோயிலில் வந்தும் சங்கல்பம் செய்துகொள்ளலாம். இந்த நிகழ்வை லலிதா ஜுவல்லர்ஸ், வி.வி. நேஷனல் மற்றும் தமிழ் மேட்ரிமோனி இணைந்து வழங்குகிறார்கள்.

ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.